Latest News :

மனைவியை பிரிந்த அசீமுடன் ஜோடி சேர்ந்த ஷிவாணி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Thursday February-04 2021

சீரியல் நடிகை ஷிவாணி, சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமான நிலையில், அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஷிவாணி, சரியான முறையில் விளையாடாமல், ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார்.

 

இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஷிவாணி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்த தனது கவர்ச்சி புகைப்படங்களை திடீரென்று நீக்கினார். சுமார் 100 புகைப்படங்கள் வரை நீக்கியவர், புதிதாக புகைப்படங்கள் வெளியிட தொடங்கியுள்ளார். அவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் நீக்கபட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து மீண்டும் மாலை 4 மணி புகைப்படங்களை ஷிவாணி பதிவிட தொடங்கியுள்ளார்.

 

அதே சமயம், திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் ஷிவாணி, சீரியல் வாய்ப்புகளை நிராகரித்து வந்தார். ஆனால், அவர் எதிர்ப்பார்த்தது போல அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் சீரியல்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

 

இந்த நிலையில், ஏற்கனவே சீரியல் நடிகர் அசீமுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட ஷிவாணி, தற்போது அதே அசீமுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அதுவும், தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அசீம், அறிவித்திருக்கும் நிலையில், அவருடன் ஷிவாணி ஜோடி சேர்ந்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

ஆனால், இந்த ஜோடி சேர்ப்பு புதிய சீரியல் ஒன்றுக்காக தான், என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். ஏற்கனவே, ‘கடைக்குட்டி சிங்கம்’ சீரியல் அசீம் மற்றும் ஷிவாணி இணைந்து நடித்த போது, இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே அசீம் மற்றும் அவரது மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

 

தற்போது புதிய சீரியல் ஒன்றுக்காக அசீம், ஷிவாணி மீண்டும் ஜோடி சேர இருப்பதாக வெளியான தகவல் ஒரு பக்கம் இருக்க, அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்திருக்கும் தகவலால், அசீம் - ஷிவாணி ஜோடி சேர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related News

7270

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery