சினிமா மற்றும் சீரியல் நடிகர், நடிகைகள் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீவஸ்தவ். இவர் கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷின் கல்லூரி நண்பர் வேடத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து, யூ-டியூப்பில் ஒளிப்பரப்பாகி வரும் 'வல்லமை தாரோயா' என்கிற வலை தொடரிலும் நடித்து வந்தார்.
இதற்கிடையே, கடந்த புதன்கிழமை படப்பிடிப்புக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட அவர், அன்றைய நாள் முழுவதும் வீடு திரும்பவில்லை. படப்பிடிப்பில் இருந்தால் ஸ்ரீவதஸ்வ் தனது போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுவது வழக்கம். இதனால் அவருடைய குடும்பத்தார் மகன் படப்பிடிப்பில் இருப்பதாக நினைத்துக்கொண்டனர்.
இந்த நிலையில், ஸ்ரீவஸ்தவ் வசிக்கும் வீட்டுக்கு அருகே, இருக்கும் மற்றொரு வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவம் அறிந்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

நடிகர் ஸ்ரீவஸ்தவ் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அதே சமயம், கடந்த சில நாட்களாகவே ஸ்ரீவஸ்தவ் மனநிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...