புதுமையான திரில்லர் படமாக உருவாகும் விதார்த்தின் 25 வது படம்!
Wednesday February-10 2021

கமர்ஷியலாக மட்டும் இன்றி இயல்பான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்கும் நடிகர்களில் ஒருவரான விதார்த், வெவ்வேறு ஜானர் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். ‘பொற்காசுகள்’, ‘அன்பறிவு’, ‘என்றாவது ஒரு நாள்’, ‘ஆற்றல்’ மற்றும் ‘அஞ்சாமை’ என ஐந்து படங்களில் தற்போது நடித்து வரும் விதார்த், தனது 25 வது படத்திலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

 

பென்ச்மார்க் பிலிம்ஸ் (Benchmark Fims) நிறுவனம் சார்பில் ஜோதி முருகன், சீனிவாசன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை சீனிவாசன் இயக்குகிறார்.

 

புதுமையான திரில்லர் பாணியில் உருவாகும் இப்படம், ஆறு பகல்கள் மற்றும் ஏழு இரவுகளில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்திய சம்பவங்களை பரபரப்பாக நகரும் படத்தில், ஒவ்வொரு இரவிலும் நாயகனுக்கு ஒரு குறுப்பிட்ட கனவு வர வேண்டும் என்கின்ற தவிப்பை, படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 38 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் ஒரு பகுதி திருக்கோவிலூரில் நடந்தது மற்ற அனைத்து பகுதிகளும் சென்னையில் படமாக்கப்பட்டது. 

 

இப்படத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்னன், விக்ரம் ஜெகதீஷ் (ஒண்டிக்கட்ட நாயகன்), பவுலின் ஜெசிகா (வாய்தா நாயகி), மாரிமுத்து, மூனார் ரமேஷ், அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன்), Doubt செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

 

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். கனல் கண்ணன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜெயசந்திரன் கலையை நிர்மாணிக்கிறார்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு இசை மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் முன்னணி இசையமைப்பாளருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Related News

7283

பாரம்பரியமான ஆடைகள் தான் பிடிக்கும் - நடிகை காயடு லோஹர்
Saturday March-21 2026

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

Recent Gallery