சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் குவியும் காமெடி நட்சத்திரங்கள்!
Wednesday February-10 2021

’அயலன்’ மற்றும் ‘டாக்டர்’ ஆகிய படங்களை முடித்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘டான்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது.

 

கல்லூரி பின்னணியில் காமெடியாக உருவாக இருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

 

’டாக்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன், இப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். காமெடி வேடத்தில் சூரி நடிக்கிறார்.

 

இந்த நிலையில், பாலசரவணன், முனிஷ்காந்த், காளி வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ் சிவாங்கி, விஜே விஜய் ஆகியோரும் ‘டான்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். 

 

Don

 

ஏற்கனவே சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘டான்’ படத்தில் தற்போது காமெடி நட்சத்திரங்கள் குவிந்து வருவதால் படம் மிகப்பெரிய காமெடி கலாட்டாவாக இருக்கும், என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

7285

பாரம்பரியமான ஆடைகள் தான் பிடிக்கும் - நடிகை காயடு லோஹர்
Saturday March-21 2026

மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

Recent Gallery