தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், ரவுடி பிக்சர்ஸ் சார்பில் ‘நெற்றிக்கண்’ மற்றும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய திரைப்படங்களை தயாரிக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, ‘கூழாங்கல்’ மற்றும் ‘ராக்கி’ ஆகிய திரைப்படங்களில் விநியோக உரிமையையும் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் புது படத்தின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வினாயக் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கின்றது. ரொமான்ஸ் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ் க்ரீம்’ (Walking/Talking Strawberry Ice Cream) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...