பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் பல பெரிய படங்களை தயாரித்து வரும் நிலையில், இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம் ( ஆர்.ஆர்.ஆர்) படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.
‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு இயக்குந ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட உள்ள படக்குழு, தற்போது வியாபரத்தையும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் தமிழ வெளியீட்டு உரிமையை கைப்பற்ற முன்னணி தயாரிப்பாளர்கள் பலர் போட்டியிட்டு வந்த நிலையில், இறுதியாக லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அந்த உரிமையை கைப்பற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் நேற்று வெளியிட்டது.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...