Latest News :

சூர்யா, விஜய் சேதுபதி படங்களுடன் மோதும் ‘தி மஸ்கிட்டோ பிலாசஃபி’
Saturday February-20 2021

விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற ’லென்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், சிறந்த அறிமுக இயக்குநருக்கான கொல்லபுடி சீனிவாசன் விருது வென்றார். தற்போது அவர் தனது இரண்டாவது படமாக ‘தி மஸ்கிட்டோ பிலாசஃபி’ (The Mosquito Philosophy) என்ற படத்தை இயக்கியுள்ளார்.

 

வாழ்க்கையை உள்ளபடி அப்படியே காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதோடு, சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப்  படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ளது. 

 

அப்பட்டமான நிதர்சனத்தை உள்ளடக்கிய இப்படம் காலங்காலமாக தமிழ் சினிமாவில் வேரூன்றியுள்ள புனைவுக் கதை சொல்லல் வடிவத்துடன் மோதுவது அனைவரின் எதிர்பார்ப்பினையும் கூட்டியுள்ளது. தன் குறுகிய திரை நேரத்தையும் குறைந்த பட்ஜெட்டினையும் சுமந்தபடி தமிழ் சினிமாவின் பிரமாண்டங்களுக்கு இடையே இச்சிறிய கொசுவின் தத்துவம் பறக்கவுள்ளது.

 

இத்திரைப்படம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கொண்டு எடுக்கப்பட்டது என்று சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை சுயாதீன விழாவில் (IFFC) இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதுவே தமிழ் சினிமாவின் முதல் ’Mumblecore’ என்னும் வகையறாவை சார்ந்த படம் எனக் கருதப்படுகின்றது. மேலும் ’Dogme 95’ கோட்பாடு இயக்கத்தின் தாக்கம் இப்படத்தில் பெருமளவில் உள்ளது. எழுதப்பட்ட திரைக்கதை வசனம் எதுவுமின்றி வெறும் 6 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட ’The Mosquito Philosophy’ யில் ரீடேக் என்று ஒரு விஷயம் இல்லவே இல்லை.

 

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இணை தயாரிப்பாளருமான ஜதின் ஷங்கர் ராஜ், முன்னேற்பாடுகள் எதுவுமின்றி இருக்கும் சூழலையும், சுற்றுப்புற வெளிச்சங்களையும் மட்டுமே வைத்து இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். மேலும் படத்தின் முதன்மை நடிகர் சுரேஷ் மற்றும் இயக்குநர் ஆகிய இருவரைத் தவிர மற்ற எந்த நடிகர்களுக்கும் படக் குழுவினருக்கும் இப்படத்தின் கதை தெரியாது. இவ்வாறு பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் உள்ளடக்கியது  கொசுவின் தத்துவம்.

 

The Mosquito Philosophy

 

ஜெதின் ஷங்கர் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜயோ ராமா பின்னணி இசையமைத்துள்ளார். டேனி சார்ல்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு சத்யம் சினிமாஸ் திரையரங்கில் ‘தி மஸ்கிட்டோ பிலாசஃபி’ (The Mosquito Philosophy) திரையிடப்படுகிறது.

Related News

7319

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery