அறிமுக இயக்குநர் தி.சம்பத் குமார் இயக்கத்தில், ப.சாய் தயாரித்திருக்கும் படம் ‘மாயத்திரை’. இதில் ‘பிடிச்சிருக்கு’, ‘முருகா’, ‘கோழி கூவுது’ போன்ற படங்களில் நடித்த அசோக் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ‘டூலெட்’, ’திரெளபதி’ பட நாயகி ஷீலா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக சாந்தினி நடித்துள்ளார்.
‘கோலி சோடா’, ‘சண்டிவீரன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த எஸ்.என்.அருணகிரி இசையமைத்திருக்கும் இப்படத்தில் பாடல் ஒன்றை நடிகை மீனா சமீபத்தில் வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.

வழக்கமான பேய் படங்களிலிருந்து மாறுபட்ட வகையில் உருவாகியிருக்கும் இந்த திகில் படத்தில், பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்ககூடிய முழுமையான ஜனரஞ்சகமான படமாக இருக்கும், என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...