சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சாம்பியன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்வா. முதல் படத்திலேயே கால்பந்தாட்ட வீரராக நடித்து பாராட்டு பெற்ற இவர், அதற்காக பல மாதங்கள் கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டார்.
தற்போது தனது இரண்டாவது படத்திற்கு தயாராகி வரும் விஷ்வா, இப்படத்தில் மீம் கலைஞர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக மீம் பற்றிய நுணுக்கங்களை அறிந்துக் கொள்வதற்காக, வினோத் என்ற மீம் கலைஞரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.
‘சாம்பியன்’ படத்தில் விஷ்வாவின் நடிப்பை பார்த்து பாராட்டு தெரிவித்ததோடு, தனது படத்தில் ஹீரோவாக விஷ்வாவையே நடிக்க வைக்க விரும்பினாராம். அதேபோல், விஷாவை பார்த்த இயக்குநர் பாரதி பாலா, தனது கதைக்கு விஷ்வா பொருத்தமாக இருப்பதால், அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.
சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் ஜானர் படமாக உருவாகும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
கே.எச் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு உள்ளிட்ட விவரங்களை படக்குழுவி விரைவில் அறிவிக்க உள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...