தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலு, சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். வடிவேலுவின் காமெடி காட்சிகள் இல்லாத நகைச்சுவை சேனல்களோ அல்லது மீம்களோ இருப்பதில்லை.
இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்திருக்கும் தடையால் தற்போது வடிவேலுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அவரை நடிக்க வைக்கவும் தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். இதனால் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கியிருக்கும் வடிவேலு, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டவர், தனது நிலை குறித்து பேசி கண்கலங்கியுள்ளார்.
இந்த நிலையில், வடிவேலு கண்கலங்கியதை அறிந்த நடிகையும் மாடலுமான மீரா மிது, வாழ்க்கையில் பெரிய உயரத்திற்கு சென்றவர்களை, வஞ்சகத்தால் தான் வீழ்த்துவார்கள். நீங்கள் கண் கலங்க கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன். நீங்கள் விரும்பினால் அந்த படத்தில் நடிக்கலாம், நான் பெருமை படுவேன், என்று தெரிவித்துள்ளார்.

விஜய் மற்றும் சூர்யா பற்றி மிக தரக்குறைவாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்த மீரா மிதுன், ரசிகர்களுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சோசியல் மீடியாக்களில் தலை காட்ட தொடங்கியுள்ளார்.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...