வி.டி.வடிவுடையான் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் படம் ‘பாம்பாட்டம்’. ஜீவன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ரித்திகா சென் மற்றும் யாஷிகா ஆனந்த் கதாநாயகிகளாக நடிக்க, பாலுவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
’ஓரம்போ’, ’வாத்தியார்’, ’6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மும்பையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
மிகப்பெரிய பொருட்செலவில் மும்பையில் செட் அமைக்கப்பட்டு வருகிறது அங்கு மல்லிகா ஷெராவத் நடிக்கவுள்ள முக்கியமான காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.
இனியன் ஜே.ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்கிறார். பா.விஜய், யுகபாரதி, விவேகா ஆகியோர் பாடல்கள் எழுத, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். சி.பழனிவேல் கலையை நிர்மாணிக்க, சூப்பர் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தினேஷ், சிவசங்கர் ஆகியோர் நடனம் அமைக்க, மணவை புவன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார். பண்ணை ஏ.இளங்கோவன் இணை தயாரிப்பை கவனிக்கிறார்.
1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதையம்சம் கொண்ட ’பாம்பாட்டம்’ திகில் மற்றும் திரில்லர் படமாக உருவாகிறது.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...