தந்தை, மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘அன்பிற்கினியாள்’. சுமார் 16 வருடங்களாக நடிக்காமல் இருந்த நடிகர் அருண்பாண்டியன் இப்படத்தில் தந்தையாகவும், அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் மகளாகவும் நடித்திருக்கிறார்கள்.
’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஸ்மோரா’, ‘ஜுங்கா’ போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.
பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வருவதோடு, தரமான படங்களை வெளியிடும் நிறுவனம் என்ற பெயர் எடுத்துள்ள சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் வெளியாகும் படங்கள் என்றாலே திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுவதுண்டு. அந்த வகையில், இப்படமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

யு சான்றிதழ் பெற்றிருக்கும் ‘அன்பிற்கினியாள்’ வரும் மார்ச் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...