இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனி ஆகியோரை தொடர்ந்து, இசையமைப்பாளர் ஷாம் டி.ராஜும் ஹீரோவாகிறார். ‘கால் டாக்ஸி’ படத்தை இயக்கிய பா.பாண்டியன் இயக்கும் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் சாம் டி.ராஜ் ஹீரோவாக நடிக்கிறார்.
ஜிப்ஸி படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பாலா ரோசய்யா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சரண் சண்முகம் படத்தொகுப்பு செய்கிறார். இவர் கிஷோர் மற்றும் லெனின் ஆகியோரிடம் உதவி எடிட்டராக பணிபுரிந்தவர்.
இப்படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அவர்களைப் பற்றியும், கதாநாயகி பற்றியும் விரைவில் படக்குழு அறிவிக்க உள்ளது.
கிரைம், சஸ்பென்ஸ் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் சென்னையில் தொடங்குகிறது.
தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக 'ஒளடதம்' படத்தின் மூலம் அறிமுகமானார் நேதாஜி பிரபு...
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...