தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு, சென்னையில் நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
18-ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான நேற்று சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ’க/பெ ரணசிங்கம்’ படத்தில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம்பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது.
ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்திருந்த க/பெ ரணசிங்கம் படத்தை விருமாண்டி எழுதி இயக்கி இருந்தார். ஜீ திரையில் இப்படம் வெளியாகி நல்லவரவேற்பை பெற்றது.

இவ்விருது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், “உழைப்பிற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் போது அது பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில் இந்த விருதைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. க/பெ ரணசிங்கம் படத்தின் ஒட்டுமொத்த டீமிற்கு என் அன்பான நன்றி. மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அதற்கு தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். நல்ல நடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்கு பேரன்பும் பெருநன்றியும்.” என்றார்.
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...
Drumsticks Productions தயாரிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ’ஜோ’ படத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியோ ராஜ் - மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, அழகான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள படம் ’ஆண் பாவம் பொல்லாதது’...