’மைனா’, ‘கும்கி’, ‘கயல்’, ‘தொடரி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபு சாலமன், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் ’காடன்’ படத்தை இயக்கியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன், என்ன படம் இயக்கப் போகிறார், என்ற எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, அவர் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார்.
’மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சேவியர் பிரிட்டோ தனது எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனம் மூலம் தயாரிக்கும் படம் ‘அழகியே கண்ணே’. அறிமுக இயக்குநர் ஆர்.விஜயகுமார் இயக்கும் இப்படத்தில் பிரபல பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.
இந்நிலையில் இயக்குநர் பிரபு சாலமன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் விஜயகுமார் பிரபு சாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கி கூறிய பிறகு, பிரபு சாலமனுக்கு கதையும், கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப் போக, அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...