Latest News :

அனைத்து தரப்பினரையும் கவர்ந்த 'அன்பிற்கினியாள்’ - கீர்த்தி பாண்டியனுக்கு குவியும் பாராட்டுகள்
Monday March-01 2021

நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில், கோகுல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘அன்பிற்கினியாள்’. அப்பா - மகள் பாசத்தை மையமாக வைத்து சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அருண்பாண்டியன் தந்தை வேடத்திலும், அவரது மகள் கீர்த்தி பாண்டியன் மகள் வேடத்திலும் நடித்திருக்கிறார்கள்.

 

வரும் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் சிறப்புக் காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில், சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டார்கள். அனைத்து தரப்பினருக்குமான விறுவிறுப்பான படமாக இருந்த இப்படம் படம் பார்த்தவர்களை வெகுவாக கவர்ந்ததோடு, கீர்த்தி பாண்டியனின் நடிப்பும் பெரும் பாராட்டு பெற்றது.

 

இந்த சிறப்புக் காட்சி மூலம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அன்பிற்கினியாள்’ படத்தில் அன்பிற்கினியாளாக நடித்த கீர்த்தி பாண்டியனின் சிறப்பான நடிப்பு மூலம் அவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

இப்படம் குறித்து பேசிய இயக்குநர் கோகுல், “இந்தப்படம் எனக்கு ஒரு புது ஜானராக இருக்கும் என நினைத்து செய்தேன். அருண்பாண்டியன் சார் இந்தப்படத்தின் மலையாள வெர்சனை காண்பித்து டயலாக் எழுதச்  சொன்னார். படம் பார்த்து முடித்ததும் எனக்கு பிடித்துப் போனதால் .நான் அருண்பாண்டியன் சாரிடம்  படத்தை நானே செய்கிறேன் என்று வாய்ப்பைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன்.  கீர்த்தி பாண்டியன் இந்தப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரின்  நடிப்பு  இந்தப்படத்தைத் தூக்கிப்பிடித்திருக்கிறது.  எங்களுக்கு இந்தப்படம்  வெற்றி பெறும் என்பதில்   சந்தேகமே இல்லை.  ஸ்பாட்டிலே அவர் நிறையமுறை கைத்தட்டல் வாங்கினார். அருண்பாண்டியன் சார் மிக சிறப்பான உழைப்பைக் கொடுத்து நடித்தார். ஜாவித் நான் வேலை செய்த இசை அமைப்பாளர்களிலே ஒன் ஆப் த பெஸ்ட் இசை அமைப்பாளர். இந்தப்படத்தில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. படத்தில் எல்லாப்பாடல்களையும் லலித் ஆனந்த் நன்றாக எழுதியிருக்கிறார். மீடியா எப்போதும் நல்லபடங்களை  மக்களிடம் கொண்டு சேர்க்க தவறியதே இல்லை.  இந்தப்படத்தையும் மக்களிடம் மீடியா சரியாக கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

நடிகர் அருண்பாண்டியன் பேசும்போது, “அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம். அன்பிற்கினியாள் படம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.  இந்தப்படத்தை நாங்கள் சீக்கிரமாகவே முடித்துவிட்டோம். கொரோனா காரணமாக ரிலீஸ் பண்ண தாமதம். நான் 18 ஆண்டுகளுக்குப் பின்  இந்தப்படத்தில் நடித்துள்ளேன்.  என் மகளோடு நடித்தது நல்ல அனுபவம். எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்திற்கு உயிர் கொடுத்தவர் மியூசிக் டைரக்டர் ஜாவித். மிக சிறப்பாக உழைத்துள்ளார். இந்தப்படத்தில் வாழ்ந்தது போன்ற ஓர் உணர்வு. இந்தப்படத்தின் கேரக்டர் போல கிடைத்தால் தொடர்ந்து நிச்சயமாக நடிப்பேன்.  ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம். படத்திற்கு  மக்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில், “நல்ல படங்களுக்கு ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருகிறார்கள் என்றால் அதற்கான காரணம் மீடியா தான். உங்களின் எழுத்தின் மூலமாக இந்தப்படத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

நடிகை கீர்த்தி பாண்டியன் பேசுகையில், “இந்தப்படத்தை மிக அன்போடு எடுத்திருக்கோம். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. மேலும் படம் ப்ரீசரில் ஷுட் பண்ணும் போது நிறைய சவால்களைச் சந்தித்தோம். அதற்கான நல்ல  ரிசல்ட்டை மக்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.” என்றார்.

 

நடிகர் பிரவின் பேசுகையில், “எனக்கு இந்தப்படம் தான் என் கரியரின் ஆரம்பம். எனக்கு வாய்ப்பளித்த அருண்பாண்டியன் சாருக்கும் கோகுல் சாருக்கும் மிக்க நன்றி. படத்தை நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். கீர்த்தி பாண்டியன் படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார்.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஜாவித் பேசுகையில், “இந்தப்படத்தில் நான் நன்றாக வேலை செய்துள்ளாக சொன்னார்கள். அதற்கான காரணம் அருண்பாண்டியன் சாரும்  கோகுல் சாரும் கொடுத்த சுதந்திரமும் நம்பிக்கையும் தான். இந்தப்படத்தில் வேலை செய்ததை பெரும் கிப்டாக நினைக்கிறேன். இந்தப்படத்திற்கு நல்ல ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

Related News

7351

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery