இந்தியாவின் முதல் மேட் ரேஸ் திரைப்படமாக உருவாகும் ‘மட்டி’!
Monday March-01 2021

இந்தியாவின் முதல் மேட் ரேஸ் ( Mad Race) திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள திரைப்படம் ‘மட்டி’ (Muddy) அறிமுக இயக்குநர் பிரகபல் இயக்கியிருக்கும் இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

 

ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.

 

சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குநர் பிரகபல் படம் குறித்து பேசுகையில், “இந்தப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன், புரொடக்‌ஷன் போஸ்ட்,  புரொடக்‌ஷ்ன, என மூன்று ஸ்டேஜ்களிலும் நிறைய வேலை இருந்தது. மேலும் படம் நல்லா வந்ததிருக்கிறது என்றால் அதற்கு பின்னால் நிறைய சவால்கள் இருந்தன.  இந்தப் படத்தில் எடிட்டிங். கேமரா, மியூசிக், CG உள்பட டெக்னிக்கல் வொர்க் அதிகம்.  14 கேமராக்கள் வைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். இது என்னோட பர்ஸ்ட் ப்ராஜெக்ட். ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கேன். நீங்கள் நல்லா சப்போர்ட் செய்து படத்தை வெற்றி பெற செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன். படத்தின் நடிகர்கள், எடிட்டர், டயலாக் ரைட்டர், மியூசிக் டைரக்டர், சினிமாட்டோகிராபர், vfx டீம் என எல்லோரும் ரொம்ப நல்லா வொர்க் பண்ணிருக்காங்க.” என்றார்.

 

தமிழ் பதிப்புக்கு வசனம் எழுதியுள்ள ஆர்.பி.பாலா பேசுகையில், “ இந்தப் படத்திற்கு வாய்ப்பு தந்த கார்த்திக் அண்ணாவுக்கு நன்றி. இயக்குநரை முதலில் சந்தித்த போது ரா புட்டேஜை காட்டினார். நான்கு வருடம் கஷ்டப்பட்டு இந்தப் புராஜெக்டை உருவாக்கி இருக்கிறார்கள். எடிட்டர் ஜான் லோகேஷ் ராட்சசன் படத்தில் மிரட்டி இருந்தார். அந்தப் படத்தை விட இந்தப்படத்தில் அதிகமாக உழைத்திருக்கிறார். எல்லோரும் மிகச் சிறப்பாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கேஜிஎப் மியூசிக் டைரக்டர் மிரட்டி இருக்கிறார். ட்ரைலர் எந்தளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கோ, அதே பிரமிப்பு படத்திலும் இருக்கிறது.” என்றார்.

 

எடிட்டர் சான் லோகேஷ் பேசுகையில், “மட்டி எனக்கு ரொம்ப பிடிச்ச படம். ராட்சசன் படம் முடித்த பின் எனக்கு மாலிவுட்ல இருந்து நிறைய வாய்ப்புகள் வந்தன. எதை ஓ.கே செய்வது என்ற யோசனையில் இருந்தேன். இயக்குநர் மட்டி படத்தின் கதையைச் சொன்ன போது எனக்கு அந்த கான்செப்ட் ரொம்ப பிடித்தது. இந்தப்படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றேன். அப்போது ஷுட் செய்த புட்டேஜை காட்டினார்கள். இந்தப்படம் ரொம்ப சேலஞ்சாக இருக்கும் என்று நினைத்தேன். வொர்க் பண்ணவும் ரொம்ப இன்ட்ரெஸ்டாக இருந்தது. இயக்குநரிடம் கொஞ்சம் டைம் கொடுத்தால் நன்றாக பண்ணலாம் என்று சொன்னேன். இயக்குநர் நிறைய டைம் கொடுத்தார். படம் நன்றாக வந்திருக்கிறது. 5 மொழியில் படம் வந்திருக்கிறது. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கண்டிப்பா படம் எல்லோருக்கும் புடிக்கும்னு நம்புறேன்.” என்றார்.

Related News

7352

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery