திரைப்பட நடிகையான சனம் ஷெட்டி, கடந்த சில மாதங்களாகவே பெரும் பரபரப்புக்குள்ளாகி வருகிறார். பிக் பாஸ் தர்ஷனுடனான காதல் தோல்விக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டவர் ரசிகர்களிடம் பாராட்டு பெற்றதோடு, பெரும் வரவேற்பும் பெற்றார்.
இதற்கிடையே, காதலர் தினத்தன்று தனது புதிய காதல் பற்றி சோசியல் மீடியாவில் பதிவிட்டவர், அந்த காதலர் யார்? என்பதை மட்டும் ரகசியமாக வைத்திருக்கிறார். மறுபுறம் சனம் ஷெட்டிக்கு திருமணமாகிவிட்டதாக ஒரு தகவல் உலா வந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், பிரபல சீரியல் நடிகருடன் சனம் ஷெட்டி படுக்கையறையில் மிக நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பல திரைப்படங்களில் நடித்து வரும் சனம் ஷெட்டியின் நடிப்பில் ‘டிக்கெட்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக ராகவ் நடித்துள்ளார்.
டிக்கெட் திரைப்படத்தின் டீசர் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், சனம் ஷெட்டியும், ராகவும் மிக நெருக்கமாக படுக்கையறையில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
அந்த சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே சமயம், அந்த டீசரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதா அல்லது யாராவது அதை கசியவிட்டுள்ளார்களா, என்பது தெரியவில்லை.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...