விஜய்யின் பெயரில் அவருடைய அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் அரசியல் கட்சி தொடங்கினார். ஆனால், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, என்று கூறிய விஜய், அந்த சம்பவத்தில் இருந்து எஸ்.ஏ.சி-யுடன் பேசுவதில்லை, என்று அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
இந்த நிலையில், தான் செய்தது தவறு என்றால் அதற்காக தனது மகன் விஜய்யிடம் மன்னிப்பு கேட்பதாக பேட்டி ஒன்றில் எஸ்.சே.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு அப்பனா சொல்றேன். நான் நடிக்கலை. நடிக்கத் தெரியாது. ஒரு தகப்பனா சொல்றேன். அப்பன் புள்ளைககிட்ட நடிக்க மாட்டான். எல்லா புள்ளைகளும் நல்லாயிருக்கணும்ன்னுதான் அப்பாமார்கள் நினைப்பாங்க.
நான் செய்தது தவறு என்று நினைத்தால் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். அன்னைக்கே நான் மன்னிப்பு கேட்டுட்டேன். இந்த பேட்டியின் மூலம் இன்னொரு முறை விஜயிடம் மன்னிப்பு கேட்கிறேன். “என்னை மன்னிசிடு”, என்று பேட்டியில் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்கும் எஸ்.ஏ.சி-யை விஜய் மனம் இறங்கி மன்னிப்பாரா
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...