Latest News :

”20 வயதில் அட்ஜெஸ்ட் செய்ய சொன்னார்கள்” - ரெஜினா கேசான்ராவின் கசப்பான அனுபவம்
Wednesday March-03 2021

‘கண்ட நாள் முதல்’ படத்தில் லைலாவுக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரெஜினா கெசாண்ட்ரா, அப்படத்தை தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவருக்கு சொல்லும்படியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே சமயம், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அங்கு பிஸியான நடிகையாகவும் வலம் வந்தார்.

 

இதற்கிடையே, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர், அப்படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். அபப்டத்தை தொடர்ந்து ‘மாநகரம்’, ’ராஜதந்திரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

 

இருப்பினும், அவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து கவர்ச்சியாக நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ரெஜினா, நடிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ரெஜினா கேசாண்ட்ரா, சினிமாவில் 20 வயதில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

 

15 வயதில் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரெஜினாவின் 20 வது வயதில், ஒரு படத்திற்காக பேசிய நபர் ஒருவர், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும், என்று கூறினாராம். அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி முழுமையாக அறியாத ரெஜினா, அது பற்றி தனது மேனேஜரிடம் பேசிக் கொள்ளுங்கள், என்று பதில் அளித்தாராம். பிறகு தான், அவருக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றிய முழு அர்த்தம் தெரிய வர, அந்த நபரிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம்.

 

தனது சினிமா வாழ்வில் இதுபோன்ற கசப்பான அனுபவம் ஒரு முறை தான் நடந்திருக்கிறது. அதன் பிறகு அப்படி ஏதும் நடக்கவில்லை, என்று கூறியிருக்கும் ரெஜினா, சினிமாவில் மட்டும் அல்ல, அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டால் கூட, அவர் ஒரு கதை சொல்வார், என்றும் கூறியிருக்கிறார்.

Related News

7356

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவி! - ரூ.1 லட்சம் வழங்கிய பிடி செல்வகுமார்!
Thursday December-11 2025

சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...

ஆதித்யா பாஸ்கர் - கெளரி கிஷன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Thursday December-11 2025

நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும், ‘96’ மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவருமான ஆதித்யா பாஸ்கரும், கெளரி கிஷனும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது...

Recent Gallery