நடிகை ஹன்ஷிகாவின் முதல் இந்தி இசை ஆல்பமான “பூட்டி ஷேக்...” (Booty shake) ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அவருடைய இரண்டாவது இசை ஆல்பமாக வெளியாகியுள்ள “மசா...” (Mazaa) பாடலும் பல்வேறு சாதனைகள் படைத்து வருவதோடு, இந்திய அளவிலான பாடல்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்திய இசையுலகில் பெரும் ஆளுமையாக விளங்கும் பி.பிராக், மசா பாடலை இசையமைத்து பாடியுள்ளார். ஜானியின் அற்புதமான வரிகளில் காதலின் பரிணாமங்களை சொல்லும் இப்பாடல் ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக பாதித்துள்ளது, என்பது சமூக வலைதளம் மற்றும் யுடியுப் தளங்களில் வரும் கருத்துக்கள் மூலம் தெரிகிறது.
அர்விந்தர் கைய்ராவுடைய ( arvindr Khaira ) அற்புத கற்பனையில், தரமான இயக்கத்தில், பாடல் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது. பாடலில் நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் புதுவிதமான தோற்றம், அவரது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து, பாராட்டுக்களை குவித்துள்ளது.
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...