ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தை டிரம் ஸ்இக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார். பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், குக் வித் கோமாளி புகழ், ராமசந்திர ராஜு, ஐஸ்வர்யா, ஜெயபாலன், ரமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
நேற்று சென்னையில் பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, வரும் மார்ச் 16 ஆம் தேதி முதல் பழனியில் தொடர்கிறது. மேலும், ராமேஸ்வரம், ராம்நாடு, தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளிலும் இப்படத்தின் காட்சிகளை படமாக்க இயக்குநர் ஹரி திட்டமிட்டுள்ளார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை தற்போது ‘ஏவி 33’ என்று அழைக்கின்றனர். இயக்குநர் ஹரியின் 16 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். எம்.சக்தி வெங்கட் கலையை நிர்மாணிக்க, அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...