டிஜிட்டல் தளத்தில் வெளியாக இந்திய அளவில் இளைஞர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியான இப்படம் இன்றைய இளையதலைமுறை தம்பதியனரிடம், பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. தற்காலத்திய நாகரீக உலகிலும், பெண்கள் இன்னும் சமையலறையில் தான் முடக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமான வகையில் பதிவு செய்திருந்த இப்படம் பார்வையாளர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.
பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ஆர்.கண்ணன், தயாரித்து இயக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் -க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’, ‘க/பெ.ரணசிங்கம்’ போன்ற படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்று தந்தது. அது போல் இப்படமும் அவருக்கும் ஒரு பெரிய மைல்கல்லாக அமையும். மற்ற நட்சத்திர தேர்வு நடைப் பெற்று வருகிறது.
இயக்குநர் ஆர்.கண்ணனின் தனது மசாலா பிக்ஸ் நிறுவனமும், எம்.கே.ஆர்.பி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். சவரிமுத்து மற்றும் எஸ்.ஜீவிதா வசனம் எழுத, லியோ ஜான்பால் படத்தொகுப்பு செய்கிறார். ராஜ்குமார் கலையை நிர்மாணிக்க, பிரதீபா பாண்டியன் உடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் பூஜையுடன் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’...
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’...
வெரஸ் புரொடக்ஷன்ஸ் (Verus Productions) தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ரூட் - ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ (ROOT – Running Out of Time) படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார்...