தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நிக்கி கல்ராணியின் சகோதரியும், கன்னட நடிகையுமான சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடன் மற்றொரு கன்னட நடிகை ராகிணி திவேதியும் கைது செய்யப்பட்டார். தற்போது இவர்கள் இருவரும் ஜாமீனில் உள்ளனர்.
இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கு தொடர்பாக 2900 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த 2 ஆண்டுகளில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி ஆகியோர் சேர்த்திருக்கும் சொத்துக்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்து இருப்பது தொடர்பான தகவல்களை திரட்டி அந்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அதன்படி, நடிகை ராகினி திவேதி கடந்த 2 ஆண்டுகளில் ரூ.6 கோடி மதிப்பிலான சொத்து சேர்த்து இருப்பதாகவும், நடிகை சஞ்சனா கல்ராணி ரூ.14 கோடி மதிப்பிலான சொத்து சேர்த்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளில் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றும், சினிமா மூலம் அவர்களுக்கு பெரிய அளவிலான வருமானம் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.
இதன் மூலம் நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப்பொருள் விற்பனை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மற்றும் அதில் கலந்து கொள்பவர்களிடம் பணம் வசூலித்தது உள்பட சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...