இயக்குநர் லிங்குசாமி படத்தில் நாயகியான கீர்த்தி ஷெட்டி!
Friday March-05 2021

மாஸ் கமர்ஷியல் கிங்கான இயக்குநர் லிங்குசாமி, தெலுங்கு சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நாயகனான ராம் பொதினேனி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது படத்தின் கதாநாயகி பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

 

அதன்படி, பிரபல இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதனை இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

ஸ்டைலீஷ் ஆக்‌ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்காலிகமாக ’ரபொ19’ (RAPO19) என்று அழைக்கப்படும், இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில், சித்தூரி ஸ்ரீனிவாசா தனது ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனத்தின் 6 வது தயாரிப்பாக தயாரிக்கிறார்.

Related News

7364

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery