துப்பாக்கி சுடும் போட்டியில் 6 பதக்கங்கள் வென்ற அஜித்!
Monday March-08 2021

துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் அஜித்குமார், சமீபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 பதக்கங்களை வென்றுள்ளார்.

 

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இந்தப் போட்டிகளை நடத்தினார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. சென்னை ரைஃபிள் கிளப், மதுரை ரைஃபிள் கிளப், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் உட்பட 52 கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன.

 

இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை வென்றார். அவருக்கு கிளப்பின் இதர உறுப்பினர்கள் தங்களுடையப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

 

Ajith

 

* ஏர் பிஸ்டல் 10 மீ - தங்கம்

 

* சென்டர் ஃபயர் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) (25 மீ) - வெள்ளி

 

* சென்டர் ஃபயர் பிஸ்டல் (என்.ஆர்) - (25 மீ) - தங்கம்

 

* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) - (25 மீ) - தங்கம்

 

* ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (என்.ஆர்) - (25 மீ)  - வெள்ளி

 

* ஃப்ரீ பிஸ்டல் (50 மீ) - தங்கம்

 

சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன், தேசிய ரைஃபிள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டிவிஎஸ் ராவ், தமிழ்செல்வன் டிஜிபி, தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் செயலாளர் ரவிகிருஷ்ணன், சென்னை ரைஃபிள் கிளப்பின் இணைச் செயலாளர் கோபிநாத் ஆகியோர் போட்டியில் வென்றவர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார்கள். 

 

Chennai Rifle Club

 

மேலும் மதுரை ரைஃபிள் கிளப் செயலாளர் வேல் சங்கர், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் செயலாளர் மருதாச்சலாம் உள்ளிட்ட பலர் இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

Related News

7372

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery