கமஹாசன் நடிப்பில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவான ‘சபாஷ் நாயுடு’ படம் சில காரணங்களால் தடைபட்டுள்ளது. அதேபோல் ‘விஸ்வரூபம் 2’ படமும் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது, அவருகே தெரியாமல் இருக்கிறது.
இந்த நிலையில், விரைவில் அரசியல் கட்சி தொடங்குவேன், என்று அறிவித்துள்ள கமல்ஹாசன், அரசியல் கட்சி தொடங்குவதும் நடிப்பு முழுக்கு போட்டுவிடுவே, என்று அதிரடியாக கூறியுள்ளார்.
சிரஞ்சீவி, விஜயகாந்த், நெப்போலியன் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலுக்கு வந்த பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்க கமல்ஹாசன், அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தான் தொடங்கும் அரசியல் கட்சிக்கு மக்களே பணம் கொடுப்பார்கள், என்று கூறியுள்ள கமல், 25 ஆண்டுகள் தான் செய்த குற்றத்திற்கு பிராய்ச்சித்தம் செய்ய வேண்டிய நேரம் இது. அரசியலில் தான் ஒரு உதயமூர்த்தியாக செயல்படுவேன், என்று அவர் கூறியுள்ளார்.
அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...
ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர்...
கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’அதர்ஸ்’...