அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது
Wednesday March-10 2021

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் படம் ‘ஹாஸ்டல்’. அறிமுக இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார்.

 

இப்படத்தில் நாசர், சதீஷ், கிரிஷ் குமார் முனிஷ்காந்த், ரவி மரியா, கலக்கப்போவது யாரு புகழ் யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு போபோ சசி இசையமைக்கிறார். ராகுல் படத்தொகுப்பு செய்ய, துரைராஜ் கலையை நிர்மாணிக்கிறார். 

 

‘ஹாஸ்டல்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இறங்கியுள்ள படக்குழு, படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

 

Hostel

Related News

7383

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery