பல வகைகளில் காதலை கொண்டாடி வரும் சினிமாவில், “காதல் பொய், காமம் நிஜம்” என்ற மையக்கருவோடு திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது.
ஒளிமார் சினிமாஸ் சார்பில் ஜெ.தனராஜ் கென்னடி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ‘பூம் பூம் காளை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.குஷால் குமார் இயக்கும் இப்படத்தின் கதைப்படி, நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேனிலவு செல்கிறார்கள். நாயகியோ கணவனுடன் அன்பாக பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட நினைக்கிறார். ஆனால், நாயகனோ திருமணம் முடிந்த பின் இனி அடுத்தது அந்த விஷயம் தானே, அது நடப்பது எப்போது என அலைபாய்கிறார். இப்படி எதிர்கருத்து கொண்டவர்களின் தேனிலவு நடந்ததா, இல்லையா என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள்.
நகைச்சுவை நிறைந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் மையக்கரு காதலை பொய் என்றும், காமத்தை நிஜம் என்று சொல்கிறது. சர்ச்சையை கிளப்பும் இப்படி ஒரு கருவை கையில் எடுத்தது பற்றி இயக்குநர் ஆர்.டி.குஷால் குமாரிடம் கேட்ட போது, “காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள், ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம் தான் அதிகம் என்பது புரியும், என்கிறார்.

இதில் நாயகனாக பிரபல நடிகை அனுராதாவின் மகன் கெவின் நடித்துள்ளார். நாயகியாக சாரா தேவா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘சிவலிங்கா’ படத்தில் சக்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களுடன் ஆர்.சுந்தராஜன், அப்புக்குட்டி, ‘காதல்’ அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே.பி.வேல்முருகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பி.ஆர்.ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார். எஸ்.ஞானகரவேல் பாடல்கள் எழுத, யுவராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
வரும் மார்ச் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...