தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் ‘என்னை அறிந்தா’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்களின் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். அதனாலே இவரை அஜித்தின் ரீல் மகள் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.
இதற்கிடையே, கதாநாயகியாக நடிக்கும் முயற்சியில் இறங்கிய அனிகா, தனது விதவிதமான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தவர், நயன்தாரா போன்றும் சிகை மற்றும் உடை அலங்காரம் செய்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டார்.
அனிகாவின் முயற்சிக்கு பலனாக மலையாள திரைப்படம் ஒன்றில் அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி கால காதலை மையப்படுத்திய அப்படத்தில் அனிகா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், அனிகா வீட்டை விட்டு வெளியே எங்கேயும் செல்லாமல், வீட்டுக்குள் முடங்கியிருப்பதோடு, தனது நிலையை எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருப்பதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காரணம், அவரை பார்க்கும் ரசிகர்கள், ‘விஸ்வாசம்’ படத்தில் நன்றாக நடித்திருப்பதாக பாராட்டுகிறார்களாம். அதே சமயம், அவரிடம், “நீங்கள் மிகவும் உயரம் குறைவாக இருக்கிறீர்கள், இன்னும் வளர வேண்டும்” என்றும் கூறுகிறார்களாம். இதன் காரணமாகத்தான் அனிகா வீட்டை விட்டு வெளியே செல்வதில் தயக்கம் காட்டி வருகிறாராம்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...