மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் ‘மன்மதன்’
Sunday March-14 2021

சிலம்பரசன் டி.ஆர். கதாநாயகனாக நடித்து பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று 'மன்மதன்’.2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

'மன்மதன்' சிலம்பரசன் டி.ஆர் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, சிலம்பரசனின் கதையும், திரைக்கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

 

சிலம்பரசன் டி.ஆர் உடன் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் என பலரும் நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்தார்.

 

வரும் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும் ‘மன்மதன்’ படத்தை நந்தினி தேவி ஃபிலிம்ஸ் தமிழ்நாடு முழுவதும் சுமார் 150 திரையரங்குகளில் வெளியிடுகிறது.

Related News

7394

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery