சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஏ.ஆர் ரஹ்மான் உருவாக்கிய இசைக்கான புதிய தளம் ‘மாஜா’ தென்னிந்தியாவில் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது. இதன் முதல் பாடலாக தீ மற்றும் அறிவு வழங்கிய “எஞ்சாய் எஞ்சாமி...” (Enjoy Enjaami) பாடல் மிகக்குறுகிய காலத்தில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை YouTube தளத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த பாடல், இயற்கையைப் பற்றியும், இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரினத்திற்கும் சொந்தமானது என்கிற செய்தியையும் தந்துள்ளது. இந்த பாடல் இசை வல்லுநர்கள் மற்றும் பொது பார்வையாளர்களின் இதயங்களை மட்டுமல்லாமல், தனுஷ் போன்ற பிரபலங்கள் மற்றும் பல முக்கிய நபர்கள் மத்தியிலும் வெகுவாக பிரபலமடைந்துள்ளது.
கலாச்சார மறுமலர்ச்சியை உண்டுபண்ணும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மானின் ’மாஜா’ சார்பில் வெளியான விளம்பர வீடியோ வெளிப்படுத்தியபடி, இத்தளத்தில் முகேன் ராவ், மாளவிகா, சத்ய பிரகாஷ் மற்றும் எண்ணற்ற சுயாதீன கலைஞர்களின் இசை தயாரிப்புகள் தொடர்ந்து வெளியாவதற்காக காத்துகொண்டு இருக்கின்றன.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...