தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, தமிழில் நான்கு சீசன்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், 5 வது சீசனுக்கான பணிகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டமோல் குழுவினர் சமையல் நிகழ்ச்சி ஒன்றை தயாரிக்க இருக்கிறார்களாம். ஆனால், இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சிக்காக அல்ல, அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் ‘குக் வித் மோமாளி’ நிகழ்ச்சிக்கு எதிராக ஒரு சமையல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ள சன் தொலைக்காட்சிக்காக.
எண்டமோல் நிறுவனம் தயாரிக்கும் இந்த சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி வர இருக்கிறார். ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, மீண்டும் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்ற உள்ளார்.
இதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். அதாவது, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, விஜய் சேதுபதிக்கு வாரத்திற்கு, அதாவது இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்களாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு கொடுக்கப்படும் சம்பளமும், விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட இருக்கும் சம்பளமும் மிக நெருக்கமாக இருப்பதால், விஷயம் அறிந்த கமல் தரப்பு சற்று அதிர்ச்சியடைந்திருக்கிறதாம்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...