இயக்குநராக பல வெற்றி படங்களை கொடுத்து வரும் சுந்தர்.சி, இயக்குவதை குறைத்துவிட்டு ஹீரோவாக நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் ஹீரோவாக வெற்றி படங்களை கொடுத்தவர், அடுத்தடுத்த படங்களில் தொடர் தோல்விகளை சந்தித்ததால், நடிப்பை நிறுத்திவிட்டு மீண்டும் படம் இயக்குவதில் கவனம் செலுத்தியவர், தான் இயக்கும் படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், மீண்டும் முழுமையான ஹீரோவாக நடிக்க தொடங்கியிருக்கும் இயக்குநர் சுந்தர்.சி, ’கட்டப்பாவ காணோம்’ படத்தை இயக்கிய மணி செயோன், இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
வி.ஆர் டெல்டா பிலிம் பேக்டரி சார்பில் வி.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்கும் இப்படத்தில் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், முருகதாஸ், ராஜ்குமார், அஜித் கோஷி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்ய, உமா தேவி, கோசேஷா, பாலா ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். கல்யாண், சந்தோஷ் நடனம் அமைக்க, விக்கி நந்தகோபால் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.
கிரைம் டிராமாவாக உருவாகும், தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...