பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான அம்ரிஷ், பண மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகை ஜெயசித்ராவின் ஒரே மகனான அம்ரிஷ், 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நானே என்னுள் இல்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது அம்மா நடிகை ஜெயசித்ரா தயாரித்தார். ஆனால், இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
இதனால் அம்ரிஷுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததை தொடர்ந்து இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தவர், ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் 2’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர், தற்போது மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், ரூ.26.20 கோடி ஏமாற்றியதாக இசையமைப்பாளர் அம்ரிஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, வளரசரவாக்கத்தில் உள்ள நெடுமாறன் என்பவர் அம்ரிஷ் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த அம்ரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை நேற்று சென்னையில் கைது செய்துள்ளனர். பிறகு சிபிசிஐடி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்பேரில் அம்ரிஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அரிய வகை இரிடியாம் பொருள் இருப்பதாக கூறிய அமிரிஷ், நேடுமாறனிடம் ரூ.26.20 கோடி பணம் பெற்றுக் கொண்டு போலியான இரிடியம் பொருளை கொடுத்து ஏமாற்றியதாக, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...