கொரோனா ஊரடங்கு முடிந்து வெளியான திரைப்படங்களில் 'காவல்துறை உங்கள் நண்பன்' திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையையும் படைத்தது. தற்போது இப்படத்தின் இயக்குநர் ஆர்.டி.எம் மற்றும் நாயகன் சுரேஷ் கவி, மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் ஆர்.டி.எம் கூறுகையில், "'காவல்துறை உங்கள் நண்பன்' படம் அனைத்து தரப்பில் இருந்தும் மிகச்சிறந்த பாராட்டுக்களை பெற்று தந்தது. பொதுமுடக்க துயர் காலத்திலும் மக்கள் ஆவலுடன் எங்கள் படத்தினை திரையரங்கிற்கு வந்து பார்த்தது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்தது. இந்த பாராட்டுக்களும், ரசிகர்களின் வரவேற்பும் மேலும் தரமான திரைக்கதையினை உருவாக்க, பெரும் ஊக்கமாக அமைந்தது. 'காவல்துறை உங்கள் நண்பன்' படம் காவல்துறையின் கருப்பு பக்கத்தை காட்டிய நிலையில் நாயகன் சுரேஷ் ரவி, தற்போது உருவாகவுள்ள படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழின் பிரபல நடிகர்கள் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்." என்றார்.
கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். விரைவில் இசையமைப்பாளரை இறுதி செய்யவிருக்கும் படக்குழு, சென்னை, பாண்டிச்சேரி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
இன்னும் தலைப்பிடப்படாத இத்திரைப்படத்தை பிரேனிஸ் இண்டர்நேஷ்னல் பிரைவேட் லிமிடெட் (Preniss International (OPC) Pvt Ltd) சார்பில் பிரேம்நாத் சிதம்பரமும், ஒயிட் மூன் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். பிரேம்நாத் சிதம்பரம் சேரன் இயக்கி நடித்த 'திருமணம்' படத்தையும், விரைவில் வெளியாக உள்ள 'நட்சத்திரா' திரைப்படத்தையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...