2009 ஆம் ஆண்டு வெளியான ‘ரேனிகுண்டா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான தீப்பெட்டி கணேசன், தொடர்ந்து ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பில்லா 2’, ’கண்ணே கலைமானே’, ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையே உடல் நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தீப்பெட்டி கணேசன், கொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதோடு, தனது நிலையை ஊடகம் மூலம் தெரியப்படுத்தினார். இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலர் அவருக்கு உதவி செய்தனர்.
மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்ட நடிகர் தீப்பெட்டி கணேசன், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தீப்பெட்டி கணேசனுக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...