Latest News :

’தூத்துக்குடி’ ஹரிக்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘மதுரை மணிக்குறவன்’
Wednesday March-24 2021

’தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’ போன்ற படங்கள் மூலம் ஹீரோவாக மிகப்பெரிய வெற்றிகளை கொடுத்த பிரபல நடன இயக்குநர் ஹரிக்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ‘மதுரை மணிக்குறவன்’. ராஜரிஷி கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்தை காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரிக்கிறார்.

 

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பதோடு, வில்லனாக நடித்து அதிரடி காட்டியிருக்கிறார் ஜி.காளையப்பன். மாதவிலதா கதாநாயகியாக நடிக்க, சுமன், பருத்திவீரன் சரவணன், ராதாரவி, கெளசல்யா, ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஓ.ஏ.கே.சுந்தர், அனுமோகன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 

அண்ணன் தம்பி இருவரின் பகைமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இறந்து விடுகின்றனர். நிறை மாத கர்ப்பிணியான அண்ணனின் மனைவி அதிர்ச்சியில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுவிட்டு இறந்து விடுகிறாள். அநாதையாக்கப்பட்ட இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை அந்த வீட்டு பணிப்பெண் வளர்க்கிறாள். மற்றொரு குழந்தையை ஒரு போலீஸ்காரர் வளர்க்கிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட கொலைக்குற்றங்களை கண்டுபிடிக்க சிறப்பு காவல்துறை அதிகாரி அந்த ஊருக்கு வருகிறார். விசாரணையில் இறந்து போனவர்கள் தன் அப்பாவும், சித்தப்பாவும் என்று தெரிய வர மனமுடைகிறார். அதே நேரம் தன் கூடப்பிறந்தவர் மதுரையில் இருக்கிறார், என தெரிந்தபின் பெரு மகிழ்ச்சி அடைகிறார். இந்த கொலைக் குற்றங்களை செய்தது யார்? தன் உடன்பிறந்த சகோதரனை சந்தித்தாரா? என்பதை திடீர் திருப்பங்களுடன் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் சொல்லும் கதை இது.

 

Kaalayappan in Madurai Manikuravan

 

டி.சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு வி.டி.விஜயன் படத்தொகுப்பு செய்கிறார். ஜாக்குவார் தங்கம், விஜய் தங்கம் ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, தினா, அபிநயஸ்ரீ நடனத்தை வடிவமைக்கிறார்கள். வெற்றி விஜய் வசனம் எழுதுகிறார்.

 

மதுரை, தேனி, குரங்கினி, சுருளி, பாகனேரி, புல்வநாயகி அம்மன் கோயில் போன்ற இடங்களில் 45 நாட்களில் இருகட்டமாக படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், பின்னணி இசை சேர்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

 

இளையராஜாவின் இசையில் 6 சூப்பர் ஹிட் பாடல்களுடனும், 8 அதிரடி சண்டைக்காட்சிகளுடனும் அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள ‘மதுரை மணிக்குறவன்’ ஹரிக்குமாருக்கு மீண்டும் மாபெரும் வெற்றியைக் கொடுக்கும் படமாக அமையும், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related News

7420

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery