67 வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில், சிறந்த நடிகருக்கான தேசிய விருது ‘அசுரன்’ படத்திற்காக தனுஷுக்கும், சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘அசுரன்’ திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டது. தேசிய விருது வென்ற ‘அசுரன்’ படக்குழுவினருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறனை கெளரவிக்கும் வகையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் விழா ஒன்று நடத்தப்பட்டது. அதில், இயக்குநர் வெற்றிமாறனை ‘அசுரன்’ படக்குழுவினர் கெளரவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதே விழா மேடையில், 65 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பாக ‘அசுரன்’ படக்குழுவினர் கெளரவிக்கப்பட்டனர்.

சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.பாலேஸ்வர், செயலாளர் ஆர்.எஸ்.கார்த்திகேயன், பொருளாளர் மதிஒளி குமார், துணைத்தலைவர் கலைமாமணி மணவை.பொன்மாணிக்கும், செயற்குழு உறுப்பினர்கள் சேவியர், மதிஒளி ராஜா, ஜெ.சுகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நாக்ஸ் ஸ்டுடியோ கல்யாணம் உள்ளிட்ட ‘அசுரன்’ படக்குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர்.

மேலும், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்ற விஜய் சேதுபதி, சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வென்ற டி.இமான், ‘ஒத்த செருப்பு’ படத்திற்காக ஜூரி விருது வென்ற நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், சிறந்த ஒலிவடிவமைப்பாளருக்கான விருது வென்ற ரசூல் பூங்குட்டி ஆகியோர்களுக்கும் சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...