நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரஜினிகாந்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இளைஞர்கள் உழைப்பை நம்பினால் வாழ்வில் உயரலாம், என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
திரைத்துறையில் நெடுங்காலம் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். எளிமையும், இனிமையும் கொண்ட அலட்டல் இல்லாத, குழந்தை மனம் கொண்ட குதூகலத்தோடு நிஜ வாழ்விலும் சரி, திரை வாழ்விலும் சரி, உற்சாகத்தோடு வலம் வரும் நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தமிழகம் தாண்டி உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டிருக்கும் தலைசிறந்த நடிகர் அவர். எது வந்தாலும் கலங்காத மனமும், நல்ல குணமும் அவருக்கு இந்த விருதை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். கடின உழைப்பு மிகப்பெரிய சாம்ராஜ்ய வெற்றியை தேடித்தரும் என்பதற்கு இந்த சாமானிய மனிதர் அடையாளமாய் நிற்கிறார். எனவே இவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இளைஞர்கள் பலர் தங்கள் வாழ்வில் உழைப்பை நம்பினால் உயரலாம், உயரத்தை எட்டலாம் என்பதற்கு கண்முன்னே நிற்கும் மிகப்பெரிய அடையாளம் நண்பர் ரஜினிகாந்த். அரசியலுக்கு அப்பாற்பட்டு, நண்பர்களாய் நாங்களிருவரும் பல ஆண்டுகள் பயணித்து வருகிறோம்.
அந்த வகையில் அவருக்கு விருது கிடைத்ததில் அவரைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி அடைவது நானாக மட்டுமே இருக்க முடியும்.
இப்படிக்கு,
ஜெயக்குமார்,அமைச்சர்
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...