மாஸ் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட ஹீரோக்கள் தற்போது தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டும் படங்களில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதனபடி ‘கடுகு’ படத்தில் முழுக்க முழுக்க நெகட்டிவ் வேடத்தில் நடித்த பரத், ‘பொட்டு’ படத்தின் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்.
மருத்துவ கல்லூரி பின்னணி திகில் படமாக உருவாகியுள்ள ‘பொட்டு’ படத்தில் பரத், நமிதா, இனியா, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமைய்யா, ஊர்வசி, மன்சூர் அலிகான், ஷாயாஜி ஷிண்டே, நான் கடவுள் ராஜேந்திரன் என பெரிய நட்சத்திர பட்டாளலே நடித்துள்ளனர்.
மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் தெரிந்த அகோரியாக நமீதா, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போல, பரத்தும் ரொம்ப வித்டியாசமான வேடங்களில் நடித்துள்ளாராம். அதில் ஒரு வேடம் பெண் வேடம். முதல் முறையாக இந்த வேடத்தில் நடித்துள்ள பரத், நடிப்பில் மிரட்டியிருக்கிறாராம்.
வி.சி.வடிவுடையான் இயக்கியிருக்கும் இப்பட்த்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். அம்ரீஷ் இசையில் இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியிருப்பதோடு, பின்னணி இசையும் பாராட்டு பெரும் விதத்தில் அமைந்துள்ளது.
மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதோடு, காமெடி, அதிரடி ஹாரர் என்று இரண்டுமே கலந்திருப்பதோடு, படத்தின் கதையும் மக்களை கவரும் விதத்தில் அமைந்திருக்கிறதாக, இயகுநர் வி.சி.வடிவுடையான கூறியுள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...