தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயரும் நேரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக தமிழகத்தை விட்டு வெளியேறிய அஞ்சலி, ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். நடிகர் மற்றும் அரசியல்வாதி ஒருவரது கட்டுப்பாட்டில் அவர் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், குடும்ப பிரச்சனை தீர்ந்ததால் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
தற்போது தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் அஞ்சலி, தமிழ் சினிமா ஹீரோ ஒருவரை காதலித்து வந்தது அனைவரும் அறிந்தது தான். அதுமட்டும் இன்றி, அஞ்சலிக்கு குழந்தை இருப்பதாகவும் தகவல் ஒன்று பரவி வருகிறது.
இந்த நிலையில், தனக்கு குழந்தை இருப்பதாக வெளியான தகவல் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ள நடிகை அஞ்சலி, ”நான் காதலில் விழுந்தேன் என்றும், எனக்கு குழந்தைகள் இருக்கிறது என்றும், தகவல் பரவி வருகிறது. காதலில் விழவே இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். ஒருவரோடு காதலில் இருந்தேன். அது நிறைவேறவில்லை. அது நடந்து இருந்தால் நானே பெருமையாக எல்லோருக்கும் சொல்லி இருப்பேன்.
நடிகை மட்டும் இன்றி எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வியடைந்தால், அந்த வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம் தான். பெண்கள் இதயம் கல் இல்லை. ஆனால், அந்த வேதனையில் இருந்து நான் கொஞ்சம் சீக்கிரமாகவே வெளியே வந்து விட்டேன். அதற்கு எனது அம்மாதான் காரணம். அவர் கொடுத்த தைரியத்தில் தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
காதல் குறித்து விளக்கம் அளித்த நடிகை அஞ்சலி, தனக்கு குழந்தை இருப்பதாக பரவும் தகவல் குறித்து எதுவும் பேசவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான "தீமா தீமா" , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...
காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...