Latest News :

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள ‘அனுக்கிரகன்’
Wednesday April-07 2021

அறிமுக இயக்குநர் சுந்தர் கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அனுக்கிரகன்’. புதுமையான திரைக்கதையோடு, ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் சுந்தர் கிரிஷ், மிராஜ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஸ்டோரி போர்டு உருவாக்குதல் போன்றவற்றைக் கற்றிருக்கிறார். மேலும், திரைப்படப் படப்பிடிப்புகளுக்குச் சென்று நடைமுறை அனுபவத்தையும் உற்றுநோக்கி கற்றுக் கொண்டிருக்கிறார். பல பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு திரைக்கலை  கற்றவர். 

 

இப்படத்தில் கதாநாயகன் நாயகி போன்ற வழக்கமான சூத்திரங்களில் நடிகர்கள் இருக்க மாட்டார்கள். கதைக்கேற்ற நாயகர்களாக இருப்பார்கள் .அப்படித்தான் முரளி ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் ஜீ தமிழ் தொடர்கள் வழியே புகழ்பெற்றவர். அஜய் கிருஷ்ணா இன்னொரு பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். 'நாடோடிகள்' படம் முதல் ஒரு திருப்புமுனையான வாய்ப்புக்காக காத்திருப்பவர் இவர்.  நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணா நடித்துள்ளார். இவர் சில கன்னட ,தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளவர்.  இன்னொரு முகம் தீபா.தமிழ் தெலுங்கில் நடித்திருக்கும் இளம் நடிகை இவர்.  'ரெக்க' படத்தில் 'கண்ணம்மா கண்ணம்மா :பாடலில் வருபவரும் 'மாரி 'படத்தில் தனுஷின் மகனாக நடித்தவருமான ராகவனும் இதில் நடித்துள்ளார் .மேலும் பல அனுபவமுள்ள நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

 

Anugrahan

 

சக்தி சினி புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர். முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா மிகப்பெரிய பொருட் செலவில் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெஹான் இசையமைக்க, எஸ்.கே.சதீஷ்குமார் படத்தொகுப்பு செய்கிறார். ரமேஷ் கமல் நடனம் அமைக்கிறார்.

 

நடுத்தர வயதுள்ள அனைவரையும் தனது பால்ய காலத்துக்குத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு திரைபப்டமாக உருவாகியுள்ள ‘அனுக்கிரகன்’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

Anugrahan

Related News

7445

தங்கம் விலை உயர்வால் கவலையடைந்த ஆண்ட்ரியா!
Monday November-17 2025

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

Recent Gallery