ஏ.ஆர்.முருகதாஸ் என்ற முன்னணி இயக்குநரின் லேபிலோடு வெளியாக உள்ள மகேஷ் பாபுவின் ‘ஸ்பைடர்’ நேரடி தமிழ்ப் படம் என்று அப்படத்தை வெளியிடும் லைகா நிறுவனம் கூறி வரும் நிலையில், ஸ்பைடர் படத்தை தெலுங்கு டப்பிங் பட்மாகவே ரசிகர்கள் பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், தமிழக ரசிகர்களிடம் நன்றாக பரிச்சியம் ஆனா ராணா உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் நடித்த படங்களே தமிழகத்தில் வியாபார ரீதியாக பெரும் தடுமாற்றத்தை சந்தித்து வரும் நிலையில், மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்தை லைகா ரூ.21 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த 21 கோடி ரூபாயில் ஒரு கோடியை வசூலிப்பதே பெரும் சிரமம் தான் என்று தமிழ் சினிமாவின் வியாபாரிகள் சிலர் கூறுகிறார்கள்.
மேலும், மகேஷ் பாபு தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாக களம் இறங்குவது போன்று விளம்பரங்கள் செய்யப்பட்டதோடு, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற ஆடியோ ரிலீஸ் விழாவில், கூட்டத்தை கூட்டி, மகேஷ் பாபுவுக்கு தமிழகத்தில் அதிக மாஸ் இருப்பது போல காட்டினார்களாம். இத்தகைய நடவடிக்கையால் சூர்யா, அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்திருப்பதோடு, ஸ்பைடர் தொடர்பான பப்ளிசிட்டி அனைத்தும் அப்படத்திற்கு நெகட்டிவாக அமைந்திருக்கிறதாம்.
அஜித், விஜயகாந்த், விஜய், சூர்யா என்று முன்னணி நடிகர்களை மட்டுமே இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு என்று தமிழ் சினிமாவில் தனித்துவம் மிக்க ரசிகர் கூட்டம் இல்லை என்பதால், மகேஷ் பாபு தெலுங்கு நடிகர் என்பதாலும் ‘ஸ்பைடர்’ படம் தமிழகத்தில் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருப்பதோடு, நேரடி தமிழ் படங்களே வசூலில் இங்கு தடுமாறிக் கொண்டிருக்கையில் ஸ்பைடர் வசூலில் சாதிக்குமா? என்பதே வியாபார வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...