ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Wednesday April-14 2021

தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘டிரைவர் ஜமுனா’.

 

'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்க்கும் இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில்  தயாரிக்கிறார். 

 

இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு தேதிகள் ஒதுக்கிய நிலையில், படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றன.

 

ஐஸ்வர்யா ராஜேஷ் கால்டாக்ஸி டிரைவராக நடிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பு செய்கிறார்.

 

இன்றைய கால கட்டத்தில் தினசரி  வாழ்க்கையில் கால்டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால்டாக்ஸி  டிரைவரை மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதை மட்டும் படக்குழு தெரிவித்து உள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Related News

7466

’கெணத்த காணோம்’ வெற்றியால் யோகி பாபு எடுத்த புது முடிவு!
Friday March-20 2026

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Thursday March-19 2026

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’)  திரைப்படத்தின் சிங்கிள் பாடல்களான  "தீமா தீமா" ,  “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது...

யோகி பாபுவின் வண்டியை உரிமை கொண்டாடும் கூட்டம்!
Thursday March-19 2026

காமெடி வேடங்களுடன் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்து வரும் யோகி பாபுவின் ‘கெணத்த காணோம்’ படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படத்தின் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery