Latest News :

டிக் டாக் இலக்கியாவுடன் அறிமுக ஹீரோவுக்கு ஏற்பட்ட நெருக்கம்!
Thursday April-15 2021

ஆல்பின் மீடியா தயாரிப்பில், கே.துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. ஆபாசமாக டிக் டாக் செய்து பிரபலமான இலக்கியா இப்படத்தில் நாயகியாக நடிக்க, நாயகனாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார்.

 

கவர்ச்சிக்கு பேர்போன இலக்கியாவுடன், அதிலும் டூயட் பாடல்களில் நடித்த தனது அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட நடிகர் அருண்குமார், “சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும். நான் 'நீ  சுடத்தான் வந்தியா' படத்தில் நடித்த போது அதை உணர்ந்தேன்.

 

எனக்கு சினிமா மீது  காதல் உண்டு. நடிப்பின் மீதும் ஆர்வம் உண்டு. இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு ஒரு பயிற்சி தேவை என்று நினைத்தேன்.அதனால் நான் கூத்துப்பட்டறையில் மாஸ்டர் பொன்முடி அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு என்னைத் தயார் செய்து கொண்டு பிறகுதான் நடிக்க வந்தேன். இருந்தாலும்  இப்படத்தில் நடிக்கும் போது எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. சில நடைமுறைத் தடைகள் இருந்தன. இது சில நாட்களில் சரியாகி விட்டது.

 

இயக்குநர் எனக்குத் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார் .அப்போதுதான் மாஸ்டரிடம் பெற்ற நடிப்புப் பயிற்சி  எனக்கு பெரிய உதவியாக இருந்ததை உணர்ந்தேன்.

 

இந்த படத்தில் 5 பாடல்கள். அதில் நானும் இலக்கியாவும் தோன்றும் 3 பாடல்கள் இருக்கின்றன.  இலக்கியா டிக் டாக் வீடியோக்களில் புகழ்பெற்றவர். அவருக்கும் இது முதல் படம், எனக்கும் இது முதல் படம், எனவே இருவருக்கும் சில தயக்கங்கள், மனத்தடைகள், இருந்தன, அது போகப் போக சரியாகி விட்டது.

 

இது ஒரு காதல் ,சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோது தயாரிப்புத்துறைப் பற்றி தெரிந்து கொண்டேன். எவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு படம் உருவாகிறது என்பதை அறிந்து கொண்டேன். இந்தப் படத்தை மிகப்பெரிய  பட்ஜெட் படம் என்று சொல்லலாம் .முழுநீள வணிகப் படத்துக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ப படப்பிடிப்பு உபகரணங்களைக் கொண்டுதான் படப்பிடிப்பு நடத்தினார்கள்.  இதில் ரெட் ட்ராகன், ஆரி  கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பெரிய படங்களுக்கான படப்பிடிப்பு யூனிட் பயன்படுத்தப்பட்டது. இந்தப் படம் நடிப்பில் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அது போலவே ரசிகர்களுக்கும் திருப்தி தரும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தை தொடர்ந்து அருண்குமார் மற்றொரு படத்திலும் ஹீரோவாக நடிக்க தயாராகிவிட்டார். அந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்களாம். அதில் ஒருவராக இலக்கியாவும் நடிக்கிறாராம்.

Related News

7472

இந்தப் படம் வெறுப்பை பேசவில்லை - ’நீளிரா’ படத்தை பாராட்டிய வெற்றிமாறன்
Monday March-30 2026

கார்த்திக் சுப்புராஜ்-ராணா டக்குபட்டி   தயாரிப்பில் ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீளிரா’...

’கார்மேனி செல்வம்’ உங்களுடன் எப்போதும் இருக்கும் ஒரு படைப்பு! - சமுத்திரக்கனி
Friday March-27 2026

ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

தமிழில் உருவான மிகப்பெரிய இணையத் தொடர் ‘முத்து என்கிற காட்டான்’!
Thursday March-26 2026

தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி...

Recent Gallery