அறிமுக இயக்குநர் ஏ.மணிவேல் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் படம் ‘பகையே காத்திரு’. கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ராசி முத்துசாமி மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஸ்முருதி வெங்கட் நடிக்கிறார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் ஆகியோர் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சிவா ஷாரா, பாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடிக்கும் இப்படம், அவருடைய சினிமா வாழ்க்கையில் மாறுபட்ட படமாகவும், ஆக்ஷன் திரில்லர் நிரைந்த சமூக படமாகவும் உருவாகிறது.
செல்வகுமார்.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். எம்.சிவா யாதவ் கலையை நிர்மாணிக்க, ராஜா முஹமது படத்தொகுப்பு செய்கிறார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ஏ.ஜெய்சம்பத் நிர்வாக தயாரிப்பை கவனிக்கிறார். லைன் புரொடியூசராக செல்வக்குமார்.எஸ் பணியாற்றுகிறார்.

’காக்கி’ எனும் குறும்படத்தை இயக்கி புகழ் பெற்ற ஏ.மணிவேல் இயக்கும் முதல் திரைப்படமான ‘பகையே காத்திரு’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. முதல் கட்டப்படப்பிடிப்பு மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ள நிலையில், அடுத்தக்கட்டப் படப்பிடிப்புகளை கொச்சின், ஐதராபாத் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது...