அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில், ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கும் படம் ‘அன்பறிவு’.
அனைத்து வகை ரசிகர்களும் குடும்பத்துடன் கொண்டாடும் கமர்சியல் திரைப்படமாக, மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில், நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், விஜய் டிவி தீனா, காஷ்மீரா, ஷிவானி ராஜசேகர் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். முதல் முறையாக இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி கிராமத்து பின்னணியில் மதுரை வட்டார வழக்கு பேசி நடித்துள்ளார்.
நெப்போலியன், ஹிப்ஹாப் ஆதி இணைந்து தோன்றும் காட்சிகள் படத்தின் வெகு முக்கிய அம்சமாக இருக்கும். மேலும் திரிஷியம் புகழ் ஆஷா சரத் மற்றும் காஷ்மீரா ஆகியோருடன் முன்னெப்போதும் கண்டிராத பாத்திரத்தில் விதார்த் ஆகியோர் இப்படத்தில் தோன்றுகிறார்கள்.
’அன்பறிவு’ கிராமத்து பின்னணியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ரஷ்யாவின் வெகு அழகான இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. திறமையான, புத்தம் புது நாயகி ஷிவானி ராஜசேகர் பங்குபெறும் காட்சிகள் ரஷ்ய பின்னணியில் அனைவர் மனதையும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
சரியான அளவில் காமெடி, காதல், செண்டிமெண்ட், கிராம மற்றும் நகர பின்னணி என அனைத்தும் கலந்த வகையில் குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான திரைப்படமாக உருவாகி வரும் ‘அன்பறிவு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டது. ஹிப்ஹாப் ஆதி புதிய கெட்டப்பில் இருக்கும் இப்போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார். பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாட்லகள் அனைத்து சூப்பர் ஹிட் பாடல்களாக உருவாகியுள்ளது.
விரைவில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை வெளியிட திட்டமிட்டுள்ள தயாரிப்பு தரப்பு அதை தொடர்ந்து படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளது.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...