தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக், திடீர் உடலக்குறைவால் இன்று காலை சுமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவின்றி அவர் இருந்ததால், அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தன் அவருக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த தகவலால் தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி மருத்துவத்துறையிலும், மக்களிடமும் பெரும் பதற்றம் அதிகரித்தது. ஆனால், விவேக் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை தரப்பில் எந்த ஒரு விளக்கமும் அளிக்கபடவில்லை.
இந்த நிலையில், சுமார் மாலை 5.30 மணியளவில் விவேக் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை தரப்பில், விவேக் உடல் நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அந்த விளக்கத்தில், ”நடிகர் பத்மஸ்ரீ விவேக் இன்று காலை 11 மணிக்கு சுயநினைவு இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினரால் அவசர சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்தனர். பின் அவருக்கு ஆஞ்சியோகிராம் தொடர்ந்து ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை தரப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மோசமான நிலையில் உள்ளார். எக்மோ கருவி உதவியுடன் இருக்கிறார். இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென்று நின்றதால் ஏற்பட்ட பிரச்சினை இது. இதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...