பிக் பாஸின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ரைசா, அதன் மூலம் மக்களிடம் பிரபலமானதோடு, திரைப்பட வாய்ப்பும் பெற்றார். அவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே, ரைசா தனது சோசியல் மீடியா பக்கத்தில், வீக்கமடைந்த தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் அவருடைய கண்ணுக்கு கீழே பெரிய அளவில் வீக்கம் இருந்ததோடு, அவர் முகம் கோரமாகவும் இருந்தது. இதனால் ரசிகர்கள் என்ன ஆனது, என்று ரைசாவிடம் கேட்டார்கள்.

ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரைசா, சாதாரணமான பேசியல் செய்வதற்காக பைரவி பியூட்டிபார்லருக்கு சென்றேன். ஆனால், அங்கிருந்த செந்தில் என்பவர், தான் சொல்லியும் கேட்காமல், தேவையில்லாத பொருட்களை என் முகத்தில் போட்டதால், என் முகம் இப்படி ஆகிவிட்டது. இது குறித்து கேட்பதற்காக செந்திலை தொடர்பு கொண்டால், அவர் போன் எடுக்கவில்லை. பரைவில் பியூட்டி பார்லர் ஊழியர்களிடம் கேட்டால், அவர் ஊரில் இல்லை என்று கூறுகிறார்கள், என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ரைசாவின் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் பைரவி பியூட்டிபார்லரின் தோல் மருத்துவரான பைரவி, இரண்டு பக்கமும் சரியான தோற்றம் இல்லாத தனது முகத்தை மாற்றும் அறுவை சிகிச்சை தான் ரைசா செய்துக் கொண்டார். அவர் முக தோளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையை ரைசா ஏற்கனவே ஒரு முறை செய்திருக்கிறார். இந்த சிகிச்சைக்குப் பிறகு சுமார் 5 நாட்கள் முகம் வீக்கமாக இருக்கும், என்று அவரிடம் ஏற்கனவே சொல்லி விட்டோம். ஆனால், அவர் இதை வைத்து எங்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்வதோடு, பணத்திற்காக எங்களை மிரட்டவும் செய்கிறார், என்று விளக்கம் அளித்துள்ளார்.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...